| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 181113b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 100 | : | _ _ |a பிரான்சிஸ் கிராண்ட் (Sir Francis Grant PRA PRA) (1803-1878) |
| 245 | : | _ _ |a பீல்டு மார்ஷல் ஜார்ஜ் ஹே, (Field Marshal George Hay) மார்க்வெஸ் ட்வீட்லே (Marquess Tweeddale) |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம் |
| 500 | : | _ _ |a பிரான்சிஸ் கிராண்ட் (Sir Francis Grant PRA PRA) (1803-1878) சர் பிரான்சிஸ் கிராண்ட் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓவியர். இவர் விக்டோரியா ராணி உட்பட எண்ணற்ற பிரித்தானிய பிரபுக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் செல்வந்தர்களின் ஓவியங்களை வரைந்துள்ளார். அவர் நரி வேட்டையிலும் பிற விளையாட்டுகளிலும் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராக ஆவதற்கு அவர் விரும்பினார். அவர் ஓவியம் வரைவதற்காக தனது படிப்பை விட்டு விட்டு சுயமாக சிந்தித்து பயிற்சி பெற்றார். அவர் முதன்முதலில் விளையாட்டுத் தொடர்பான படங்களை வரையும் ஓவியராக அறியப்பட்டார். அதன்பின், அவரது காலத்தின் மிக வெற்றிகரமான மற்றும் நாகரீக உருவப்படம் வரைபவராக தன்னை நிலைநாட்டினார். இவர் 1866 ல் ராயல் அகாடமியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் லார்ட் ஹாரிஸ் (Lord Harris ) மற்றும் மார்க்வெஸ் ட்வீடெலை (Marquess Tweeddale) ஆகியோரின் உருவப்படங்களை வரைந்தார். கிராண்ட், ராயல் அகாடமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 1851 இல் கல்வியாளராகவும் இருந்தார். 1834 மற்றும் 1879-க்கு இடையில் அவர் 253 கலைப் படைப்புகளை உருவாக்கி ராயல் அகாடமியில் காட்சிப்படுத்தினார். இதில் பல முழு நீள உருவ ஓவியங்கள் இருந்தன. இந்த படைப்புகள் மத்தியில் ராணி விக்டோரியா மற்றும் இளவரசர் மனைவியின் குதிரைச்சவாரி ஓவியங்கள் இருந்தன. மேலும், பல மேட்டுக்குடி மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் உருவப்படங்களை வரைந்தார். பீல்டு மார்ஷல் ஜார்ஜ் ஹே, (Field Marshal George Hay) மார்க்வெஸ் ட்வீட்லே (Marquess Tweeddale) ஜார்ஜ் ஹே (1787-1876 AD) ஒரு ஸ்காட்டிஷ் சிப்பாய் மற்றும் நிர்வாகி ஆவார். ஆர்தர் வெல்லஸ்லி தலைமையிலான பெனிசுவல் போரில் ஒரு ஊழிய அதிகாரியாக மார்க்வெஸ் பணியாற்றினார். இரண்டாம் போர்டோ போரில் வெல்லஸ்லியுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். ஹே 1842 ஆம் ஆண்டில் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது பொது சேவை செய்யும் பணிக்குத் திரும்பினார். சென்னை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். அப்பணியின் போது தளர்வாக இருந்த இராணுவத்தின் ஒழுக்கத்தை மீட்டெடுத்தார். மேலும் 9 நவம்பர்1846 இல் லெப்டினென்ட் ஜெனரலுக்கு பதவி உயர்வு பெற்றார். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று 1848 இல் ஸ்காட்லாந்துக்குத் திரும்பினார். |
| 510 | : | _ _ |a
|
| 653 | : | _ _ |a நவீன கால ஓவியம், ஓவியம், ராயல் அகாடமி, தேசியக் கலைக் கூடம், பிரித்தானிய இந்தியா, இங்கிலாந்து, சென்னை, அருங்காட்சியகம், பீல்டு மார்ஷல் ஜார்ஜ் ஹே, (Field Marshal George Hay) மார்க்வெஸ் ட்வீட்லே (Marquess Tweeddale), பிரான்சிஸ் கிராண்ட் (Sir Francis Grant PRA PRA) (1803-1878) |
| 700 | : | _ _ |a தணிகை மணி |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 | : | _ _ |a சென்னை அருங்காட்சியகம் |b # |c சென்னை |d சென்னை |f சென்னை |
| 850 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 914 | : | _ _ |a 13.0713738 |
| 915 | : | _ _ |a 80.2564629 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00030 |
| barcode | : | TVA_PNT_00030 |
| book category | : | நவீனக் கலைகள் |
| cover | : |
|
| Primary File | : |